பக்கங்கள்

பக்கங்கள்

25 ஜூலை, 2021

அரசியல் கைதிகள் விவகாரம் - சட்டமா அதிபருடன் விரைவில் பேச்சு

www.pungudutivuswiss.com
அண்மையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்கான சட்ட நடவடிக்கை குறித்து சட்டமா அதிபர் திணைக்களத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை அவர் குறிப்பிட்டிருந்தார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், வட கிழக்கு பிராந்தியங்களில் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர், அவர்களை விடுவிக்கப்படவேண்டும் எனும் கோரிக்கைகளை பலர் எம்மிடம் முன்வைத்துள்ளனர். குறித்த விடயம் தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களத்துடன் கலந்துரையாட உத்தேசித்துள்ளோம் என்றார்.

இதேவேளை, பல்வேறு பகுதியில் உள்ள காணிப்பிரச்சினைகள் குறித்தும் தாம் ஆராய்ந்து வருவதாக அவர் இதன்போது குறிப்பிட்டார்.