பக்கங்கள்

பக்கங்கள்

8 ஆக., 2021

ஓகஸ்ட் 1- 6ஆம் திகதி வரை 509 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று, உயிரிழப்புகள் 2 வாரங்களில் அதிகரிக்கும்

www.pungudutivuswiss.com
இலங்கையில் கோவிட் தொற்று மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அடுத்த இரண்டு வாரங்களில் மேலும் அதிகரிக்கும் என்று இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.



இலங்கையில் கோவிட் தொற்று மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அடுத்த இரண்டு வாரங்களில் மேலும் அதிகரிக்கும் என்று இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள தரவுகளின் அறிவியல் விசாரணையின் போது இந்த தகவல் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் நோய்த்தொற்றுகள் மற்றும் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால், இதற்கான பொறுப்பை மக்களே ஏற்க வேண்டும். அத்துடன் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என அவர் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, இலங்கையில், ஓகஸ்ட் 1ஆம் திகதியிலிருந்து 6ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் கொரோனா தொற்றுக்குள்ளாகி 509 பேர் உயிரிழந்துள்ளனர்.

அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிடும் அறிக்கையின் அடிப்படையில் 1ஆம் திகதி 63 மரணங்களும் 2ஆம் திகதி 74 மரணங்களும் 3ஆம் திகதி 82 மரணங்களும் 4ஆம் திகதி 94 மரணங்களும் 5 மற்றும் 6ஆம் திகதிகளில் தலா 98 மரணங்களும் பதிவாகியுள்ளன.