பக்கங்கள்

பக்கங்கள்

21 ஆக., 2021

ரிஷாத் பதியுதீன் இல்லத்தில்வல்லுறவுக்குட்படுத்தப்பட்டதாக கூறிய யுவதி கன்னித்தன்மையுடன்

www.pungudutivuswiss.com
முன்னாள் அமைச்சரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் இல்லத்தில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்பட்ட யுவதி கன்னித் தன்மையுடன் இருப்பதாக மருத்துவ பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிஷாத் வீட்டில் பணிப் பெண்ணாக இருந்த யுவதியொருவர் கடந்த 2016ஆம் ஆண்டு ரிஷாத்தின் மைத்துனரான மொஹமட் ஷியாப்தீன் இஷ்மத்தினால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் குறித்த பெண் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் அதன் அறிக்கை கடந்த 16ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த மருத்துவ அறிக்கையின் பிரகாரம் குறித்த யுவதியின் கன்னித்தன்மை கலைந்தமைக்கான அறிகுறிகள் கிடையாது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.