பக்கங்கள்

பக்கங்கள்

4 செப்., 2021

யாழ். வைத்தியசாலைகளில 30இற்கும் மேற்பட்ட கொரோனா சடலங்கள் தேக்கம்.அனுராதபுரம் அனுப்ப முடிவா

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்த 30 மேற்பட்டவர்களின் சடலங்கள் வைத்தியசாலைகளின் பிரேத அறைகளில் தேங்கியிருப்பதாக தெரியவருகிறது.

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்த 30 மேற்பட்டவர்களின் சடலங்கள் வைத்தியசாலைகளின் பிரேத அறைகளில் தேங்கியிருப்பதாக தெரியவருகிறது.

கடந்த 02 ஆம் திகதி கொரோனாவால் உயிரிழந்த ஒருவருக்கு 08 ஆம் திகதியே தகனம் செய்வதற்கான சாத்தியம் உள்ளதாக மாநகரசபை நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு நாளைக்கு சராசரி ஐந்து பேரின் சடலங்களை மட்டுமே தகனம் செய்யமுடியும் என்றும் கூடுதலாக எரியூட்ட முற்பட்டால் அதற்கான கருவி பழுதடையக்கூடிய சாத்தியம் உள்ளதாக மாநகர முதல்வர் தெரிவித்திருந்தமை தெரிந்ததே.