பக்கங்கள்

பக்கங்கள்

9 செப்., 2021

இலங்கையில் சினோபார்ம் தடுப்பூசி மருந்து நிரப்பும் ஆலை

www.pungudutivuswiss.com
சினோபார்ம் குழுமம் இலங்கையில் தடுப்பூசி நிரப்பும் ஆலையை அமைப்பதற்கு ஆர்வம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சினோபார்ம் குழுமத்தின் தலைவர் லியு ஜிங்ஜென் இலங்கையில் தடுப்பூசி நிரப்பும் ஆலையினை அமைப்பதற்கு ஆர்வம் காட்டியுள்ளதாக பீஜிங்கில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கை தூதுவர் பாலித கொஹோன, செப்ரெம்பர் 7 ஆம் திகதி சினோபார்ம் குழுமத் தலைவர் லியு மற்றும் மூத்த நிர்வாக குழுவினரை சந்தித்துள்ளார். அதன் போது ஸ்ரீலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இருந்து அனுப்பப்பட்ட தனிப்பட்ட கடிதத்தை சினோபார்ம் புழுமத் தலைவரிடம் ஒப்படைத்தார்.

சினோபார்ம் குழுமம் இலங்கையுடன் தொடர்ந்து ஒத்துழைத்து தடுப்பூசிகளை வழங்கும் என்று அதன் தலைவர் தெரிவித்துள்ளார். அதன் போது பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் இலங்கையின் சாதகமான வர்த்தக அணுகலைப் பயன்படுத்திக் கொள்ள இலங்கையில் தடுப்பூசி நிரப்பும் ஆலையை நிறுவுவதில் அவர் ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

சினோபார்ம் தடுப்பூசி 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் பயன்படுத்தப்படுவதாகவும், 50 க்கும் மேற்பட்ட அரச தலைவர்கள் மற்றும் பிற உயர் அதிகாரிகளுக்கு சினோபார்ம் தடுப்பூசி போடப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், சினோபார்ம் தடுப்பூசி மூலம் தடுப்பூசி போடப்பட்ட நபர்களுக்கு பாதகமான விளைவுகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

தூதுவர் டொக்டர்.பாலித கொஹோன தடுப்பூசிகளை வழங்கியதற்காக சீன அரசுக்கு ஜனாதிபதி மற்றும் இலங்கை மக்கள் சார்பாக தனது பாராட்டையும் தெரிவித்தார்.