பக்கங்கள்

பக்கங்கள்

25 அக்., 2021

நடு கடலில் தத்தளித்த 39 அகதிகள் மீட்பு

www.pungudutivuswiss.com
நடுக்கடலில் தத்தளித்த 39 அகதிகளை பிரெஞ்சு கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர்.
பா-து-கலேயின் Boulogne-sur-Mer நகர கடற்பிராந்தியத்தில் இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை நண்பகல் இடம்பெற்றுள்ளது. சிறிய படகு ஒன்றி அகதிகள் பயணித்த நிலையில், படகு திடீரென நடுக்கடலில் மூழ்க ஆரம்பித்துள்ளது. தேசிய கடற்படையினரின் உலங்குவானூர்திப்படை இவர்களை கவனித்துவிட்டு, உதவிக்குழுவை அழைத்துள்ளது.
அதையடுத்து, படகில் பயணித்த அகதிகளை கடற்படையினர் மீட்டனர். பிரிதானிய படையின் உலங்குவானூர்தியும் தேவைப்பட்டால் அழைப்பதற்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.