பக்கங்கள்

பக்கங்கள்

27 அக்., 2021

புதிய அமைச்சரவையை இன்று அறிவிக்கிறார் ஜஸ்டின் ட்ரூடோ

www.pungudutivuswiss.com


பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தமது புதிய அமைச்சரவையில் இடம்பெறவிருக்கும் அமைச்சர்கள் தொடர்பாக இன்று அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தமது புதிய அமைச்சரவையில் இடம்பெறவிருக்கும் அமைச்சர்கள் தொடர்பாக இன்று அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்ந்து மூன்றாவது முறையாக கனடாவில் ஆட்சியமைக்கும் பிரதமர் ட்ரூடோ, தமது புதிய அமைச்சரவையில் அதிரடி மாற்றங்களை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் புது முகங்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் வெளிவிவகார அமைச்சர் மார்க் கார்னியோ புதிய அமைச்சரவையில் இருந்து நீக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், சுற்றுச்சூழல் அமைச்சர் ஜொனாதன் வில்கின்சன் இயற்கை வளத்துறைக்கு மாற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுச்சூழல் அமைச்சராக ஸ்டீவன் கில்பெல்ட் பொறுப்பேற்பார் என்றே தெரிய வந்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சர் பொறுப்பில் இருந்து ஹர்ஜித் சஜ்ஜன் நீக்கப்பட்டு அனிதா ஆனந்த் தெரிவு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அமைச்சரவையில் புதிதாக பெண்களுக்கும் வாய்ப்பளிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

ஆனால், கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் புதிய அமைச்சரவையில் துணைப் பிரதமராக நிதியமைச்சராக இரு பதவிகளிலும் நீடிப்பார் என்று ட்ரூடோ ஏற்கனவே அறிவித்துள்ளார்.