பக்கங்கள்

பக்கங்கள்

23 அக்., 2021

ஜனநாயகம், மனித உரிமைகளுக்கு குரல் எழுப்ப பின்னிற்க போவதில்லை

www.pungudutivuswiss.com


ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் பலமான சமூகம் என்பன தொடர்பாகத் தாம் குரல் எழுப்ப பின்னிற்க போவதில்லையென இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவர் ஜுலி ச்சுங்  தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் உதவி செயலாளராக இருந்த அவர், இலங்கைக்கான தூதுவராக நியமிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் பலமான சமூகம் என்பன தொடர்பாகத் தாம் குரல் எழுப்ப பின்னிற்க போவதில்லையென இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவர் ஜுலி ச்சுங் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் உதவி செயலாளராக இருந்த அவர், இலங்கைக்கான தூதுவராக நியமிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

இந்நிலையில் நேற்று அவர் அமெரிக்க செனட்டில் வெளிவிவகார குழுவின் முன்னால் உரையாற்றியபோது இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்து சமுத்திரத்தின் மத்தியில் உள்ள இலங்கை, இந்து - பசுபிக் வலையத்தில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது இந்நிலையில் அமெரிக்காவிற்கும் இலங்கைக்குமான நல்லுறவை வலுப்படுத்த ஆவன செய்வதாகவும் அவர் கூறியுள்ளார்.