பக்கங்கள்

பக்கங்கள்

9 அக்., 2021

அடுத்த வருட தொடக்கத்தில் தேர்தலை நடத்த இணக்கம்!

www.pungudutivuswiss.com



மாகாணசபைத் தேர்தலை  விகிதாசார முறைப்படி நடத்த அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்  முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற தேர்தல் முறை மாற்றம் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கேற்ற அமைச்சர் பசில் ராஜபக்ச இதனைத் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாகாணசபைத் தேர்தலை விகிதாசார முறைப்படி நடத்த அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற தேர்தல் முறை மாற்றம் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கேற்ற அமைச்சர் பசில் ராஜபக்ச இதனைத் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்

கலப்பு முறைப்படி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதும் சிறுபான்மை கட்சிகள் விகிதாசார முறைப்படியே தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தனர்.

இந்நிலையில் விகிதாசார முறைப்படி மாகாண சபைத் தேர்தலை நடத்தவும் 2022ஆம் ஆண்டு முதல் காலாண்டில் தேர்தலை நடத்தவும் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.