பக்கங்கள்

பக்கங்கள்

29 அக்., 2021

மார்க்கம் நெடுஞ்சாலையில் அவசரமாக தரையிறங்கிய விமானம்! [Thursday 2021-10-28 16:00]

www.pungudutivuswiss.com
மார்க்கம் 407 நெடுஞ்சாலையில் சிறிய ரக விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. பட்டன்வில் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட பின்னர்  ஏற்பட்ட பிரச்சினைகளை அடுத்து, விமானம் நெடுஞ்சாலையில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

வூட்பைன் அவென்யூவுக்கு அருகே, நெடுஞ்சாலையின் கிழக்குப் பகுதி பாதையில் இந்த விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது. எனினும், விமானத்துக்கு சேதங்கள் ஏற்படவில்லை என்பதுடன், அதில் இருந்து இரண்டு விமானிகளுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.