பக்கங்கள்

பக்கங்கள்

7 நவ., 2021

கிரிக்கெட்டி20 உலக கோப்பை : அரையிறுதி சுற்று வாய்ப்பை இழந்தது தென் ஆப்பிரிக்கா

www.pungudutivuswiss.com
நேற்று ஷார்ஜாவில் நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியும் ரன்ரேட் அடிப்படையில் தென் ஆப்பிரிக்க அணி அரையிறுதி சுற்று வாய்ப்பை இழந்தது .

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டித்தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சூப்பர் 12 சுற்றின் குரூப் 1 பிரிவில் நேற்று நடைபெற்ற 39-வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியும் இங்கிலாந்து அணியும் மோதின . இந்த போட்டியில் 10 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.
இதனால் குரூப்-1 பிரிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் 5 போட்டிகளில் விளையாடி 4 -ல் வெற்றி பெற்றன. எனவே அதிக ரன்ரேட் வைத்திருக்கும் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெறும் நிலை உருவானது .

அதன்படி அதிக ரன்ரேட் வைத்திருக்கும் இங்கிலாந்து முதலிடத்திலும், ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்தையும் பிடித்து அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின.

4 போட்டிகளில் வெற்றி பெற்றும் , ரன்ரேட் குறைவாக இருந்த காரணத்தால் தென் ஆப்பிரிக்க அணி அரையிறுதி சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது.