பக்கங்கள்

பக்கங்கள்

8 நவ., 2021

அருட்தந்தையை கைது செய்ய முயற்சி - நீதிமன்றம் முன் அணிவகுத்த கத்தோலிக்க குருமார்

www.pungudutivuswiss.com


உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் கருத்துக்களை வெளியிட்டார் என்ற காரணத்தை வைத்து அருட்தந்தை சிறில் காமினியை கைது செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பவடுவதாக குற்றம் சுமத்தி இன்று கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தின் முன்பாக ஆா்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் கருத்துக்களை வெளியிட்டார் என்ற காரணத்தை வைத்து அருட்தந்தை சிறில் காமினியை கைது செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பவடுவதாக குற்றம் சுமத்தி இன்று கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தின் முன்பாக ஆா்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது

கத்தோலிக்க மதகுருமார் உட்பட்ட பொதுமக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

தம்மை கைது செய்யக்கூடாது என்ற இடைக்கால தடையுத்தரவை கோரி அருட்தந்தை சிறில் காமினி, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவின் விசாரணை இன்று இடம்பெறுகின்ற நிலையிலேயே குறித்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.