பக்கங்கள்

பக்கங்கள்

22 டிச., 2021

WelcomeWelcome யாழ்ப்பாண மக்களுக்கு எச்சரிக்கை!

www.pungudutivuswiss.com

உண்ணி காய்ச்சல், டெங்கு, மலேரியா காய்ச்சல் ஆகியவை தொடர்பக யாழ்ப்பாண மக்கள் அவதானமாக செயற்படுமாறு, யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சி. யமுனானந்தா அறிவுறுத்தியுள்ளார். யாழ். போதனா வைத்தியசாலையில், நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இதனை தெரிவித்தார்

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், உண்ணி காய்ச்சல் என்பது மழைக்குப் பின்னரான காலத்தில் வயல்களில், தோட்டங்களில் வேலை செய்யும் போது தொற்றுகின்ற நோயாக காணப்படுவதாகவும் இதனை ஆரம்பத்திலேயே சிகிச்சை அளித்தால் குணப்படுத்தலாம் எனவும் கூறினார். தவறும் பட்சத்தில் உயிரிழப்பு ஏற்படலாமெனத் தெரிவித்த அவர், எனவே நாய், பூனைகளுடன் தொடர்பில் இருப்பவர்கள் கவனமாக இருத்தல் வேண்டும் எனவும் காய்ச்சல் வரும்போது, உரிய மருத்துவ சிகிச்சையை பெற வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

அதே போல டெங்கு காய்ச்சலும் இந்த மழையுடன் அதிகரித்து காணப்படுவதாகத் தெரிவித்த அவர், யாழ். போதனா வைத்தியசாலையில், சுமார் 10 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றார்கள் எனவும் கூறினார்.

அத்துடன், சில நாள்களுக்கு முன்னர், வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவருக்கு, மலேரியா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது எனவும் மலேரியாவைப் பரப்புகின்ற நுளம்பு எமது பிரதேசத்தில் காணப்படுகின்றமையாலும் தற்போது நோயாளி ஒருவர் இனங்காணப்பட்டு உள்ளமையாலும் நாங்கள் நுளம்பை கட்டுப்படுத்தவற்குரிய கவனம் எடுத்தல் வேண்டும்.

அத்தோடு, நுளம்பு குடம்பிகளில் மலேரியா நோய் தன்மை உள்ளதா என்பதை சுகாதாரப் பிரிவினர் ஆராய்ந்து வருகிறார்கள்' எனவும், அவர் தெரிவித்தார்.