பக்கங்கள்

பக்கங்கள்

12 ஜன., 2022

இந்தியப் பிரதமருக்கான ஆவணத்தை சமர்ப்பிப்பதில் இழுபறி!

www.pungudutivuswiss.com

இந்திய பிரதமரிடம் கையளிப்பதற்காக இன்று ஒப்படைக்கப்படவிருந்த தமிழ்க் கட்சிகளின் ஆவணம் வரும் 18ஆம் திகதியே இந்தியத் தூதுவரிடம் கையளிக்கப்படும் என 
தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமரிடம் கையளிப்பதற்காக இன்று ஒப்படைக்கப்படவிருந்த தமிழ்க் கட்சிகளின் ஆவணம் வரும் 18ஆம் திகதியே இந்தியத் தூதுவரிடம் கையளிக்கப்படும் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்

இன்று இந்த ஆவணம் கையளிக்கப் படுவதாக இருந்த போதிலும் இந்திய உயர்ஸ்தானிகர் அவசரப் பயணமாக டெல்லி சென்றிருப்பதால் அவர் திரும்பி வந்தவுடன் குறித்த ஆவணத்தை கையளிக்க தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, எதிர்வரும் 18ம் திகதி இக்கடிதம் இந்திய உயர்ஸ்தானிகரிடம் கையளிக்கப்படும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக இன்று காலை தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா கைச்சாத்திட்டதோடு அனைத்து தலைவர்களும் இந்தியப் பிரதமருக்கான ஆவணத்தில் கைச்சாத்திடும் நடவடிக்கை முற்றுப்பெற்றதாக அவர் மேலும் தெரிவித்தார்.