பக்கங்கள்

பக்கங்கள்

23 ஜன., 2022

பிரச்சாரமும் பரப்புரையுமே ஆயுதங்கள்

www.pungudutivuswiss.com
விடுதலைப்புலிகள் தற்போது ஆட்டிலறிகளையும் தற்கொலை குண்டுதாக்குதலையும் பயன்படுத்துவதில்லை. பிரச்சாரமும் பரப்புரையுமே அவர்களின் ஆயுதங்கள் என சிறீலங்கா வெளிவிவகார அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப்புலிகள் தற்போது தற்கொலை குண்டுகளை பயன்படுத்துவதில்லை. பரப்புரையும் பிரச்சாரங்களும் நீதிமன்ற நடவடிக்கைகளுமே தற்போது அவர்களின் ஆயுதம் என தெரிவித்துள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயனத் கொலம்பகே எனினும் விடுதலைப்புலிகளின் ஈழக்கொள்கை மாறவில்லை என குறிப்பிட்டுள்ளார்

பேட்டியொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் திட்டம் குறித்த அறிக்கை எவ்வாறானதாக காணப்படும் என்பது குறித்த உங்கள் எதிர்பார்ப்பு என்ன?

நாங்கள் மனித உரிமைகளை மதிக்கின்றோம் மூன்று தசாப்தங்களாக பயங்கரவாதத்தை எதிர்த்து போரிட்ட போதிலும் பாரிய அளவிலான மனித உரிமை மீறல்களில் நாங்கள் ஈடுபடவில்லை என்பதே எங்கள் நிலைப்பாடு.

எப்பிஐ 2008 இல் அறிவித்தபடி இலங்கை உலகின் மிகவும் ஈவிரக்கமற்ற பயங்கரவாத இயக்கத்தை எதிர்த்துப்போராடியது.

பிரச்சினைகள் இருந்தால் இலங்கை உள்நாட்டு பொறிமுறைகள் மூலம் இலங்கை அதற்கு தீர்வை காண்கின்றது.

விடுதலைப்புலிகள் இராணுவரீதியாக உள்நாட்டில் தோற்கடிக்கப்பட்டுள்ள போதிலும் அவர்கள் வெளிநாடுகளில் செயற்படுகின்றனர்.

அவர்களது ஆயுதங்கள் தற்போது தற்கொலை குண்டுகளும் ஆட்டிலறிகளும் இல்லை மாறாக பரப்புரை நீதிமன்ற நடவடிகைகள -பிரச்சாரமே தற்போது அவர்களின் ஆயுதங்கள் ஆனால் அவர்களின் கொள்கை மாறவில்லை. தமிழீழம் என்ற தனிநாடு.

குறிப்பிடத்தக்க அளவு புலம்பெயர்தமிழர்கள் விடுதலைப்புலிகளின் கொள்கைகளை முன்னெடுப்பதால் வாக்குகளை பெறுவதற்காக அவர்களிற்கு ஆதரவளிக்கும் தீர்மானங்களை எடுக்கும் நிலையில் உள்ளவர்களின் ஆதரவை அவர்களால் பெறமுடிகின்றது.

மனித உரிமைகளை சில குழுக்களும் நாடுகளும் துஸ்பிரயோகம் செய்கின்றன என நாங்கள் கருதுகின்றோம் நாங்கள் கொள்கைகளை ஐநாவின் பிரகடனத்தை ஐநாவை நாங்கள் மதிக்கின்றோம்.

ஆனால் இலங்கையர்களை விசாரணை செய்வற்கான வெளிநாட்டு பொறிமுறைகளை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. மனித உரிமை ஆணையாளர் தன்னிடம் 120,000 ஆதாரங்கள் உள்ளன என தெரிவிக்கின்றார்.

அந்த ஆதாரங்கள் என்ன? ஆதாரங்கள் என்னவென தெரிவிக்காமல் குற்றம்சாட்டுவது நீதியா?

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் 16 உறுப்பினர்களிற்கு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஏனையவர்களை விடுதலை செய்வது குறித்து ஆராய்வதற்கான குழுவை ஜனாதிபதி நியமித்துள்ளார்.

அதன்பின்னர் பயங்கரவாத தடைச்சட்ட்த்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த மேலும் 13 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.