பக்கங்கள்

பக்கங்கள்

13 மார்., 2022

சற்று முன.! “உக்ரைன் மெலிடோபோல் நகரத்தின் மேயர் கடத்தல்”…. வெளியான அதிர்ச்சி தகவல்…

www.pungudutivuswiss.com
ரஷ்யா உக்ரைன் மீது 17 ஆவது நாளாக போர் தொடுத்து வரும் நிலையில் உக்ரைனின் தலைநகரான கீவ்வை கைப்பற்றுவதில் ரஷ்ய படைகள் மும்முரம் காட்டி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து உக்ரைனும் ரஷ்யாவுக்கு பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இரு நாடுகளிலும் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

இந்த நிலையில் உக்ரைன் உள் விவகார அமைச்சரின் ஆலோசகர் அன்டன் ஜெராஷ்செங்கோ ரஷ்ய படையினரால் உக்ரைனின் மெலிடோபோல் நகரத்தின் மேயர் இவான் பெடோரோவ் கடத்தப்பட்டதாக குற்றம் சாட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது “உக்ரைனின் மெலிடோபோல் நகரத்தின் மேயர் இவான் பெடோரோவ், நகர நெருக்கடி மையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தார். இவர் நகரின் வாழ்க்கை ஆதரவு பொறுப்பாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் ரஷ்ய படையினர் அந்நகரத்தை ஆக்கிரமித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ரஷ்ய படையினருக்கு ஒத்துழைக்க மறுத்ததால் மேயர் இவான் கடத்தப்பட்டுள்ளார்” என்று கூறியுள்ளார்.