 அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சு பதவிகளை ஏற்றுக்கொண்ட உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல பாராளுமன்றில் இன்று இதனை தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோவும், மனுஷ நாணயக்காரவும் அமைச்சராக பதவியேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது |