பக்கங்கள்

பக்கங்கள்

11 மே, 2022

வடமராட்சி கிழக்கு - வெற்றிலைக்கேணி முள்ளியானில் கணவனை கொன்று புதைத்த மனைவி!

www.pungudutivuswiss.com


வடமராட்சி கிழக்கு - வெற்றிலைக்கேணி பகுதியில் கணவனை மனைவி கொலை செய்து  புதைத்துள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக மருதங்கேணி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வடமராட்சி கிழக்கு - வெற்றிலைக்கேணி பகுதியில் கணவனை மனைவி கொலை செய்து புதைத்துள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக மருதங்கேணி பொலிஸார் தெரிவித்துள்ளனர்

விநாயகபுரம், வெற்றிலைக்கேணி, முள்ளியான் என்ற முகவரியைச் சேர்ந்த தாசன் சிவஞானம் (வயது 42) என்ற நபர் நேற்றுமுன்தினம் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட தகவல் நேற்று வெளியாகியிருந்தது.

சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட மருதங்கேணி பொலிஸார், முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டவரின் மனைவியும் பிறிதொரு நபரும் இணைந்து கொலை செய்து புதைத்தமை தொடர்பில் தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

நீதிமன்ற அனுமதியின் பின்னர் சடலம் அகழ்ந்தெடுக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.