பக்கங்கள்

பக்கங்கள்

10 ஜூன், 2022

சாணக்கியனை அச்சுறுத்திய ரணில்!

www.pungudutivuswiss.com


நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கடந்த மே மாதம் 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்தை மீளப்பெற வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கடந்த மே மாதம் 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்தை மீளப்பெற வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்

நாடாளுமன்றில் இன்று உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

“20ஆவது அரசியல் அமைப்பு திருத்தம் உட்பட நாட்டுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு ஆதரவளித்தமை காரணமாகவே பலரின் வீடுகள் எரியூட்டப்பட்டதாக சாணக்கியன் வெளியிட்ட கருத்து ஏற்புடையதல்ல.

இந்த கருத்தின் மூலம் சாணக்கியன் நடந்த வன்முறைகளை ஏற்றுக்கொள்கிறாரா? மரணத்தை ஏற்றுக்கொள்கிறாரா? சாணக்கியனின் கருத்தின்படி, 20வது திருத்தத்துக்கு ஆதரவளித்தமையே வீடுகள் எரியூட்டப்பட்டமைக்கு காரணமாக இருக்குமானால் குமார வெல்கமவின் மீது ஏன் தாக்குதல் நடத்தப்பட்டது?

கோட்டாபய வீட்டுக்கு செல்லவேண்டும் என்று முதலில் கூறியவரே குமார வெல்கம என்பது அனைவருக்கும் தெரியும். அவர் ஏன் தாக்கப்பட்டார்?

எனவே அடுத்த நாடாளுமன்ற அமர்வின்போது சாணக்கியன் தமது கருத்து தொடர்பில் கவலை வெளியிட்டு தமது கருத்தை மீளப்பெற வேண்டும்

இல்லையேல், குறித்த கருத்து தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு சபாநாயகரிடம் கோரவேண்டியிருக்கும்” என்றும் ரணில் விக்கிரமசிங்க எச்சரித்தார்.