பக்கங்கள்

பக்கங்கள்

22 ஜூன், 2022

போராட்டக்காரர்களை பாதுகாக்க தவறியதை ஒப்புக் கொண்ட பொலிஸார்!

www.pungudutivuswiss.com



கோட்டா கோ கம மீது கடந்த மே 9 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலின் போது பொலிஸார் போராட்டக்காரர்களை  பாதுகாக்க தவறியமையை கோட்டை பொலிஸார் மற்றொரு வழக்கின் போது ஒப்புக்கொண்டனர்.

கோட்டா கோ கம மீது கடந்த மே 9 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலின் போது பொலிஸார் போராட்டக்காரர்களை பாதுகாக்க தவறியமையை கோட்டை பொலிஸார் மற்றொரு வழக்கின் போது ஒப்புக்கொண்டன

நேற்று ஜனாதிபதி செயலகம் முன்பாக கைது செய்யப்பட்ட 21 ஆர்ப்பாட்டக்காரர்களை கோட்டை நீதிமன்றில் ஆஜர் செய்தபோது மன்றில் ஆஜராகி விடயங்களை முன் வைத்த உதவி பொலிஸ் அத்தியட்சர் தில்ருக் குறித்த விடயத்தை வெளிப்படுத்தினார்.

கடந்த ஏப்ரல் 9 ஆம் திகதி முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆர்ப்பாட்டக் காரர்களுக்கு கடந்த மே 9 ஆம் திகதி தவிர்ந்த ஏனைய அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஒத்துழைப்பு வழங்கி செயற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஆர்ப்பாட்ட கலத்தில் சுகயீனமடைந்தவர்களை வைத்தியசாலைக்கு அழைத்து செல்வது முதல் அங்கு திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் உள்ளிட்டவற்றை தேடிக் கண்டுபிடிப்பது உள்ளிட்ட பல ஒத்தாசைகளை பொலிஸார் போராட்டக்காரர்களுக்கு வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.