பக்கங்கள்

பக்கங்கள்

27 ஜூலை, 2022

எங்கே கொன்று புதைத்தீர்கள்?

www.pungudutivuswiss.com

  அன்று தமிழ் மக்களை, தமிழ் இளைஞர்களை கைது செய்து அடைப்பதற்காக அவசரகாலச் சட்டம் கொண்டு வரப்பட்டது,அவசர கால சட்டத்தை மீண்டும் திணிப்பதற்கு இன்று விவாதம் நடைபெறுகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

அன்று தமிழ் மக்களை, தமிழ் இளைஞர்களை கைது செய்து அடைப்பதற்காக அவசரகாலச் சட்டம் கொண்டு வரப்பட்டது,அவசர கால சட்டத்தை மீண்டும் திணிப்பதற்கு இன்று விவாதம் நடைபெறுகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்

இன்றைய தினம் நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தொடாந்தும் கருத்துத் தெரிவிக்கையில், இறுதி யுத்தத்தின் போது தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டனர். பலரைக் காணவில்லை. அவர்களை எங்கே கொன்று புதைத்தீர்கள் என்று இந்த அரசு சொல்ல வேண்டும் எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும் தற்போது அவசரகால சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அன்று தமிழர்களை கைதுசெய்வதற்கே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் இப்போது தமிழ் சிங்கள மக்கள் நன்கு உணர்ந்து விட்டார்கள். இந்தச் சட்டத்தால் தமிழ் மக்கள் மட்டும் அல்ல சிங்கள மக்களும் தற்போது பாதிக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.