பக்கங்கள்

பக்கங்கள்

14 ஜூலை, 2022

தமிழன் இல்லாத இடமுமில்லை கோத்தா போக இடமும் இல்லை

தேசியத்தலைவரினதும் போராளிகளினதும் தியாகத்தின் நிமித்தம் உலகெங்கும் தமிழர் பரந்து கோலோச்சுவது கோத்தபாயாவுக்கு பெரும்பிரச்சினையாம் . உலகின் செல்வந்த நாடுகள், வல்லரசு நாடுகள், பலம் மிக்க நாடுகள், மனித உரிமை பேணும் நாடுகள், அரசியல் தஞ்சம் வழங்கும் நாடுகள் ,பணக்கார நாடுகள் என  சுமார் 60 நாடுகளில் ஈழத்தமிழன் பலத்தோடும் வளத்தோடும் சுதந்திரமாகவும் வாழ்ந்து வருகிறான் . சிங்களவர்களும் பல நாடுகளில் பரவலாக  வாழ்கிறார்கள்  தப்பியோடிய  கோத்தாவும் சகபாடிகளும் எங்கே  போகலாம் என்று யோசிக்கிறார்களோ அங்கெல்லாம் தமிழன் வாழ்கிறான் ஓடி முழிக்கிறான் .பயம் நெஞசை அடைக்கிறது .பணம் கொட்டிக் கிடந்தாலும் நிம்மதியாக உன்ன உறங்க  வாழ ஒரு நாட்டின் ஜனாதிபதிக்கு  ஓடடைக்குடிசை  கூட  இல்லாப்பரிதாபம் .இவனால் கொல்லப்படட  ஒவ்வொரு  தமிழனின் ஆன்மாவின் சாபம் .மாவீரர் இல்லத்தில் கால் வாய்த்த கொடுங்கோலனின் கால்களை தரையில் பட விடாது . ஆண்டவன் இருக்கிறான் உறவுகளே