பக்கங்கள்

பக்கங்கள்

22 ஜூலை, 2022

முப்படையினருக்கும் அதிகாரம்!- வர்த்தமானியை வெளியிட்டார் ரணில்.

www.pungudutivuswiss.com


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாடு முழுவதும் பொது அமைதியை பேணுமாறு முப்படையினருக்கும் அழைப்பு விடுக்கும் அதிவிசேட வர்த்தமானியை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாடு முழுவதும் பொது அமைதியை பேணுமாறு முப்படையினருக்கும் அழைப்பு விடுக்கும் அதிவிசேட வர்த்தமானியை வெளியிட்டுள்ளார்

பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 12ம் பிரிவினால் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள தத்துவங்களின் பயனைக்கொண்டு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதன் மூலம் இலங்கை இராணுவத்தினர், கடற்படையினர் மற்றும் விமானப்படையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இன்று அதிகாலை காலிமுகத்திடல் போராட்டக்களத்தை இராணுவத்தினர் கைப்பற்றி அங்கிருந்த போராட்டக்காரர்களை பலப்பிரயோகத்தின் மூலம் விரட்டியடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.