பக்கங்கள்

பக்கங்கள்

19 ஜூலை, 2022

கூட்டமைப்பின் தீர்மானம் தொடர்பில் குழப்பம் சூடுபிடிக்கும் ஜனாதிபதி தேர்தல் களம்! பெரும்பான்மை வாக்குகள் டலஸூக்கு

www.pungudutivuswiss.comகூட்டமைப்பின் தீர்மானம் தொடர்பில் குழப்பம் சூடுபிடிக்கும் ஜனாதிபதி தேர்தல் களம்! பெரும்பான்மை வாக்குகள் டலஸூக்கு
130 பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று டலஸ் அழகப்பெரும ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டுவார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நாளைய தினம் நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.

தற்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும, எதிர்க்கடச்சித் தலைவர் சஜித் பிரேமதா, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்டோர் போட்டியிடுவதாக அறிவித்திருந்தனர்.

டலஸூக்கு ஆதரவு! கூட்டமைப்பின் தீர்மானம் தொடர்பில் குழப்பம்
சூடுபிடிக்கும் ஜனாதிபதி தேர்தல் களம்! பெரும்பான்மை வாக்குகள் டலஸூக்கு | Majority Vote Goes To Dullas

எனினும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் தனது ஆதரவினை டலஸ் அழகப்பெருமவுக்கு வழங்கப் போவதாகவும் இன்று காலை அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், டலஸ் அழகப்பெரும தரப்புக்கும் சஜித் அணிக்கும் இடையில் இன்று மாலை முக்கிய கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.



அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் தொடர்பில் சில குழப்பங்கள் இருந்தாலும், இன்று மத்தியஸ்தம் செய்து கலந்துரையாடி தீர்ப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.