பக்கங்கள்

பக்கங்கள்

13 ஜூலை, 2022

SLAF-AN Antonov-32: என்ற குறியீடு அடங்கிய ராணுவ விமானத்தில் தப்பி ஓடினார் கோட்டா: மாலை தீவில் தரையிறங்கியது

www.pungudutivuswiss.com
இன்று(புதன் கிழமை) அதிகாலை இலங்கை நேரப்படி சுமார் 1 மணி அளவில், இலங்கை வான் படை விமானமான அன்டனோவ் 32 என்ற விமானத்தில் ஏறி கோட்டபாய மாலை தீவு நோக்கிச் சென்றுள்ளார். மாலை தீவு நேரப்படி அதிகாலை 2.50 மணிக்கு இந்த ராணுவ விமானம் மாலே தீவில் தரை இறங்கியுள்ளது என செய்திச் சேவை தெரிவித்துள்ளது. மாலை தீவு அரசு கோட்டபாயவை திருப்பி அனுப்பவில்லை. அப்படி வெளியான செய்தி உண்மையும் அல்ல. மாலே தீவில் இருந்து படகு மூலம் எந்த ஒரு தீவையும் கோட்டபாய அடைய முடியும். காரணம் சுமார் 2,000 தீவுகள் அடங்கிய நாடு தான் மாலை தீவு. அங்கே தனித் தீவு ஒன்றை ராஜபக்ஷர்கள் வாங்கி வைத்திருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி இருந்தது. கோட்டபாய தனது மனைவி மற்றும் ஒரு பாதுகாப்பு அதிகாரியோடு மற்றும் விமானியோடும் மாலை தீவு சென்றுள்ளதாக அறியப்படுகிறது.