பக்கங்கள்

பக்கங்கள்

22 ஆக., 2022

கோட்டாவுடன் தொடர்பு கொண்டார் ரணில்!

www.pungudutivuswiss.com


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடுவதற்காக அவரை தொடர்பு கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடுவதற்காக அவரை தொடர்பு கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது விடுத்த கோரிக்கையை அடுத்து அவர் கோட்டாபய ராஜபக்சவை தொடர்பு கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை ரணிலை சந்தித்த பசில், கடந்த ஜூலை மாதம் 9 ஆம் திகதி மக்கள் எதிர்ப்புக்களை எதிர்கொண்டு நாட்டை விட்டு வெளியேறி தற்போது தாய்லாந்தில் இருக்கும் கோட்டாபய ராஜபக்சவை விரைவில் நாடு திரும்ப வசதி செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.