பக்கங்கள்

பக்கங்கள்

29 ஆக., 2022

உயிரியல் பிரிவில் துவாரகேஸ் சாதனை!

www.pungudutivuswiss.com



நேற்று வெளியாகியுள்ள உயர்தரப் பரீட்சை முடிவுகளின் படி, மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரி மாணவன் தமிழ்வாணன் துவாரகேஸ் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தினைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

நேற்று வெளியாகியுள்ள உயர்தரப் பரீட்சை முடிவுகளின் படி, மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரி மாணவன் தமிழ்வாணன் துவாரகேஸ் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தினைப் பெற்றுக் கொண்டுள்ளார்

அத்துடன் பதுளை, கெங்கொல்ல மகா வித்தியாலய மாணவன் இசார லக்மால் ஹீன்கெந்த கலைப்பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தினைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

மேலும், நாரம்மல, மயுரபாத மத்திய கல்லூரி மாணவன் நெரந்த தில்ஹார குமாரசிங்க பொறியாளர் தொழில்நுட்ப பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தினைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டததில், கணிதப் பிரிவிலும் தொழில்நுட்ப விஞ்ஞானப் பிரிவிலும் யாழ்.மத்திய கல்லூரி மாணவர்கள் மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்றுள்ளனர்.

கணிதப்பிரிவில் மாவட்ட ரீதியில் யாழ்.இந்து மாணவன் இரண்டாம் இடத்தினைப் பெற்றுள்ளார்.

அதேவேளை, உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் யாழ்.இந்துக் கல்லூரி மாணவர்கள் மாவட்ட ரீதியில் முதல் இரண்டு இடங்களைப் பெற்றுள்ளனர்.

கலைப்பிரிவில் யாழ்.வேம்படி மகளிர் கல்லூரி மாணவி மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்.

யாழ். இந்துக் கல்லூரியில் 41 மாணவர்கள் 3 பாடங்களிலும் A சித்தி பெற்றுள்ளனர்.

தென்மராட்சி கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளுக்கு இடையில் மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி முதலிடத்தைப் பெற்றுள்ளது 12 மாணவர்கள் 3A பெற்றுள்ளனர்.

விஞ்ஞான பிரிவில் 1 மாணவர் 3A, வணிகப் பிரிவில் 1 மாணவர், கலைப் பிரிவில் 10 மாணவர்கள் 3A பெற்று தென்மராட்சி வலயத்தில் முதல் நிலையில் மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி விளங்குகிறது.