பக்கங்கள்

பக்கங்கள்

10 செப்., 2022

இலங்கையின் வெற்றி தொடர்கிறது ! ஆசியக் கிண்ண இறுதி சுப்பர் - 4 போட்டியிலும் பாகிஸ்தானை வெற்றிகொண்டதுஇலங்கை

www.pungudutivuswiss.com
 பாகிஸ்தான் அணிகள் துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று மோதி ஆசிய கிண்ண இருபதுக்கு -20 சுப்பர் 4 கடைசிப் போட்டி இரண்டு அணிகளுக்கும் இறுதிப் போட்டிக்கு முந்தைய ஒத்திகையாக அமைந்தன

இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பாகிஸ்தான் அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.


அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 121 ஓட்டங்களை பெற்றது.

வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு தடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 17 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 124 ஓட்டங்களைப் பெற்று 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

இந்நிலையில் எதிர்வரும் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும் ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதவுள்ளன.