பக்கங்கள்

பக்கங்கள்

13 செப்., 2022

5 அரசியல் கைதிகள் மயக்கம்! - மருத்துவமனையில் அனுமதி!

www.pungudutivuswiss.com


பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் 13 பேர், தமது விடுதலையை வலியுறுத்தி கடந்த 6 ஆம் திகதியிலிருந்து கொழும்பு மகஸின் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் 13 பேர், தமது விடுதலையை வலியுறுத்தி கடந்த 6 ஆம் திகதியிலிருந்து கொழும்பு மகஸின் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்

இவர்களில் 5 பேரின் நிலைமை மோசமடைந்ததைத் தொடர்ந்து மருத்துவமனையில் அவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தம்மைப் பிணையிலாவது விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடந்த 2019ஆம் ஆண்டு, 2020ஆம் ஆண்டு ஆகிய காலப்பகுதிகளின் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களில் 5 பேரே மயக்கமடைந்ததைத் தொடர்ந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்