பக்கங்கள்

பக்கங்கள்

12 செப்., 2022

வேலனை, புளியங்கூடல், ஊர்காவற்றுறை, காரைநகர் ஊடாக இரண்டாம் நாள் ஊர்தி வழிப் போராட்டம்

www.pungudutivuswiss.com

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்யக் கோரி நாடளாவிய ரீதியில் ஊர்திவழிப் போராட்டமாக சென்று கையெழுத்து திரட்டும் நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் இரண்டாவது நாளாகவும் இன்று வேலணை, புளியங்கூடல், ஊர்காவற்றுறை, காரைநகர் ஆகிய இடங்களில் இடம்பெற்றது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அமைப்பும், சர்வசன நீதிக்கான அமைப்பும் இணைந்து இந்த கையெழுத்து சேகரிப்பு பணிகளை முன்னெடுத்து வருகின்றது.


குறித்த பிரசார நடவடிக்கையானது யாழ்ப்பாணம் மாவிட்டபுரம், கந்தசாமி கோயிலிலில் நேற்று ஆரம்பமானது.

இந்த பணிகளானது 25 மாவட்டங்களுக்கும் சென்று ஹம்பாந்தோட்டை வரை முன்னெடுக்கப்படவுள்ளது.

காரைநகர்