பக்கங்கள்
▼
பக்கங்கள்
▼
21 செப்., 2022
www.pungudutivuswiss.comஅரசியல் கைதிகள் விடுதலை… ! ரணில்- சுபாஷ்கரன் மற்றும் பிரேம் சிவசாமி சந்திப்பில் தமிழர்களுக்கு கிடைக்க இருக்கும் பெரும் விடுதலைபிரித்தானிய மகாராணியாரின் இறுதிக் கிரிகையில் கலந்து கொள்ள, இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க லண்டன் வந்திருந்தார். நேற்றுக் காலை(19) அவர் கலந்து கொண்டு விட்டு மாலை, பார்க் ஹோட்டலில் வைத்து, லைக்கா நிறுவனத்தின் உரிமையாளர் திரு சுபாஷ்கரன் அல்லிராஜாவைவும், துணை பொறுப்பாளர்(deputy chairman) பிரேம் சிவசாமி அவர்களையும் சந்தித்து உரையாடினார். இதில் தமிழர்களின், அரசியல் தீர்வு தொடர்பாகவும், மேலும் தமிழர்கள் இலங்கையில் எதிர் நோக்கும் பல பிரச்சனைகள் தொடர்பாக விரிவாக அலசி ஆராயப்பட்டது. இதனை அடுத்து திரு சுபாஷ்கரன் அவர்கள், இலங்கையில் எந்த ஒரு ஆதாரமும் இன்றி, குற்றச் செயல் புரிந்ததாக கூறி பல வருடங்களாக சிறையில் வாடும், தமிழ் அரசியல் கைதிகளை முதலில் விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார்.