பக்கங்கள்

பக்கங்கள்

22 அக்., 2022

நிறைவேறியது 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச்சட்டம்.மஹிந்த உட்பட 44 பேர் கலந்துகொள்ளவில்லை.எதிராகசரத் வீரசேகர மாத்திரம்

www.pungudutivuswiss.com
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் 178  மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்ட மூலத்துக்கு ஆதரவாக 179 வாக்குகளும்,எதிராக 01 வாக்கும் அளிக்கப்பட்டன.

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்ட மூல வரைபு மீதான வாக்கெடுப்பில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ உட்பட 44 பேர் கலந்துகொள்ளவில்லை.

இந்நிலையில், 22 ஆவது திருத்த வரைபுக்கு  சரத் வீரசேகர மாத்திரம் எதிராக வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது