பக்கங்கள்

பக்கங்கள்

10 அக்., 2022

3 இராணுவ அதிகாரிகளுக்கு தடை போடவுள்ள கனடா

www.pungudutivuswiss.com


இலங்கையை சேர்ந்த மூன்று இராணுவ அதிகாரிகளிற்கு எதிராக கனடா  தடைகளை விதிக்கவுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதால் இலங்கை இராணுவ அதிகாரிகள் உடனடியாக தடைகளை எதிர்கொள்ளவுள்ளனர்.

இலங்கையை சேர்ந்த மூன்று இராணுவ அதிகாரிகளிற்கு எதிராக கனடா தடைகளை விதிக்கவுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதால் இலங்கை இராணுவ அதிகாரிகள் உடனடியாக தடைகளை எதிர்கொள்ளவுள்ளனர்

கனடாவே இது தொடர்பான முதல்நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளது,கனடா மூன்று இராணுவஅதிகாரிகளிற்கு எதிராக தடைவிதிக்கலாம் இதன் பின்னர் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உட்பட பல நாடுகள் தடை நடவடிக்கைளை முன்னெடுக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இலங்கை தொடர்பான தீர்மானமொன்றை நிறைவேற்றியுள்ளது 20 நாடுகள் இதற்கு ஆதரவளித்துள்ளன.

முன்னைய தீர்மானங்களை போல இல்லாமல் இந்த தீர்மானம் இலங்கையின் பொருளாதாரநெருக்கடி அதனால் உருவாகியுள்ள மனித உரிமை விடயங்களிற்கு அதிகளவு முக்கியத்துவத்தை வழங்கியுள்ளது.

நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் ஊழல்கள் குறித்து குறிப்பிடுவதுடன் ஆர்ப்பாட்டங்க்காரர்களை அரசாங்கம் கையாண்டவிதம் குறித்து கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளது.