பக்கங்கள்

பக்கங்கள்

1 அக்., 2022

4 நகரங்களை ரஷ்யாவோடு இணைத்த புட்டின்: தனது நாடு என்று அறிவித்து மகிழ்ந்தார்

www.pungudutivuswiss.com 

உக்கிரைன் நாட்டின் 4 மிகப் பெரிய நகரங்களை, தனது நாட்டோடு இணைத்துள்ளார் ரஷ்ய அதிபர் புட்டின். இதனை ஐ.நா செயலாளர் ஏற்க்க மறுத்துள்ள நிலையில். தனது சிறப்பு கையொப்பத்தை இட்டு, அன் நகரங்களை தனது இடமாக அறிவித்துள்ளார் புட்டின். அதன் மீது உக்கிரைன் படைகள் தாக்குதல் நடத்தினால், கடும் எதிர் தாக்குதல் நடத்தப்படும் என்றும். அன் நகரங்களை தாக்கினால் ரஷ்யாவையே தாக்கியதற்கு சமன் என்றும் புட்டின் கூறியுள்ளார். இருப்பினும் தமது நாட்டின் 4 நகரங்களை..

ரஷ்யா தனது இடமாக அறிவித்துள்ளது தொடர்பாக உக்கிரைன் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. மாறாக அமெரிக்காவிடம் அதி நவீன ஏவுகணைகளை கோரியுள்ளது உக்கிரைன். அது கிடைத்த மறு கணமே அன் நகரங்கள் மீது கடும் தாக்குதலை உக்கிரைன் ராணுவம் தொடுக்கும் என்று கூறப்படுகிறது. சிலவேளை இதனை சாக்காக வைத்து. புட்டின், உக்கிரைன் மீது அணு ஆயுத தாக்குதலை நடத்தக் கூடும் என்றும் கூறப்படுகிற