பக்கங்கள்

பக்கங்கள்

15 அக்., 2022

40க்கும் மேற்பட்ட நகரங்களில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்

www.pungudutivuswiss.com
கடந்த 24 மணி நேரத்தில் 40-க்கும் மேற்பட்ட நகரங்கள் மீது ரஷ்யா ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
அதே நேரம் உக்ரைன் விமானப்படை 25 ரஷ்ய இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கருங்கடலுக்கு அருகே கப்பல் கட்டும் மையம் மற்றும் துறைமுகம் மீதும் ரஷ்யா தாக்குதல் நடத்தியதாகவும், மைகோலாயின் தெற்கு நகரம் கடுமையான ஷெல் தாக்குதலுக்கு உள்ளானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஈரானில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானங்கள் மூலம் உக்ரைனின் முக்கிய உள்கட்டமைப்புகள் தாக்கப்பட்டதாக உக்ரைன் அதிபர் அலுவலகத்தின் துணைத் தலைவர் தெரிவித்துள்ளார்.