வரதராஜன், இரகுபதி ஷர்மா, இலங்கேஸ்வரன், நவதீபன், ராகுலன், காந்தன், சுதா மற்றும் ஜெபநேசன் -தீபாவளியன்று விடுவிக்கப்படவுள்ள அரசியல் கைதிகள்!
www.pungudutivuswiss.com
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 8 தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுமன்னிப்பு வழங்கியுள்ள நிலையில், அவர்கள் எதிர்வரும் தீபாவளி தினத்தன்று விடுதலை செய்யப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலவருடகாலமாக பயங்கரவாத்தடைச்சட்டத்தின்கீழ்த் தடுத்துவைக்கப்பட்டிருந்த வரதராஜன், இரகுபதி ஷர்மா, இலங்கேஸ்வரன், நவதீபன், ராகுலன், காந்தன், சுதா மற்றும் ஜெபநேசன் ஆகிய 8 பேருக்குமே இவ்வாறு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.