பக்கங்கள்

பக்கங்கள்

14 நவ., 2022

கப்பலில் இருந்து காப்பாற்றப்பட்ட இலங்கையர்கள் சாகும்வரை உண்ணாவிரதம்

www.pungudutivuswiss.com
கப்பலில் கனடா செல்ல முயற்ச்சித்து கப்பல் பழுது காரணமாக அதிலிருந்து மீட்கப்பட்டு வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த 303 பேர் தற்பொழுது உணவு உட்கொள்ளாமல் உண்ணாவிரத போராட்டத்தினை ஆரம்பித்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது, தாம் மிகவும் கஸ்ரத்தின் மத்தியில் இலங்கையினை விட்டு கனடா செல்ல வந்து தற்போது வியட்நாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தங்களை இலங்கைக்கு மீண்டும் அனுப்ப வேண்டாம் எனவும், அங்கு சென்றால் எங்களால் வாழ முடியாது எனவும், தங்களது பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறும் எனவும் தெரிவித்த அவர்கள், தங்களை மேற்குலகு நாடுகள் காப்பற்ற முன்வர வேண்டும் எனவும் தெரிவித்து அவர்கள் உண்ணாவிரத போராட்டத்தினை ஆரம்பித்
துள்ளனர்.