பக்கங்கள்

பக்கங்கள்

4 நவ., 2022

வெள்ளைக்கொடி சரணடைந்தவர்களை கோட்டாபய சுட்டுக்கொல்லுமாறு உத்தரவிட்டார்.'

breaking


முல்லிவாய்க்கள்  தமிழின அழிப்பில் வெள்ளைக்கொடியுடன் சரணடைபவர்கள் தொடர்பான விடயம் பிரிகேட்டுக்கு பொறுப்பானவர் என்ற வகையில்

எனக்குத் தான் முதலில் தெரியும் என இனப்படுகொலையாளி  மேஜர் ஹசித சிறிவர்தன சிங்கள இணைய ஊடகமொன்றுக்கு செவ்வியில் கூறியுள்ளார்.

பின்னர் அது தொடர்பில் எனது தளபதிக்கு தெரியப்படுத்தினேன். வெள்ளைக்கொடி விவகாரத்தை முழு உலகமுமே அறியும். புலித்தேவன் நடேசன் உட்பட மேலும் பலர் வந்திருந்தனர். சவேந்திர சில்வா போன்றவர்கள் இராணுவத்தில் அரசியல் மயத்தை உருவாக்கி இருந்தார்கள்.

சவேந்திர சில்வா பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டாபயவிற்கு தொலைபேசி அழைப்பு எடுத்து வெள்ளைக்கொடி விவகாரத்தை கூறும்போது, கோட்டாபய அவர்களை சுட்டுக்கொல்லுமாறு உத்தரவிட்டார்.'

சவேந்திர சில்வாவிடம் நான் சொன்னேன் யுத்தத்தை வேறு திசைக்கு திருப்பாதீர்கள். கொல்லப்போகும் பசுவைக்கூட காப்பாற்றும் நாடு இது. எனவே சரணடைந்தவர்களை கொல்வது சரியில்லை என்று நான் அவருக்கு சொன்னேன். உடனே அங்கிருந்து என்னை அனுப்பிவிட்டார் சவேந்திரசில்வா.

இவ்வாறு இறுதிக்கட்ட யுத்தத்தில் நடைபெற்ற பயங்கரமான நிகழ்வுகளை அந்த யுத்தத்தில் பங்கேற்று உயிர் அச்சுறுத்தல் காரணமாக தற்போது அமெரிக்காவில் அடைக்கலம் தேடியுள்ள   பேரினவாத சிறிலங்கா இராணுவத்தின் அதிகாரியான மேஜர் ஹசித சிறிவர்தன வெளிப்படுத்தியிருக்கிறார்.