பக்கங்கள்

பக்கங்கள்

19 டிச., 2022

பிரான்ஸில் பதற்ற நிலை10 சிறுவர்கள் மரணம் மேலும் பலர் காயம்

www.pungudutivuswiss.com
பிரான்ஸில் லியோன் நகருக்கு அருகில் அமைந்துள்ள 07 மாடிகளைக் கொன்ட குடியிருப்பு தொகுதியொன்றில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தினால் 03 தொடக்கம் 15 வயதிற்கு உட்பட்ட 10 சிறுவர்கள் பரீதாபமாக தீயில் சிக்கி உயிரிழந்துள்ளனர். மேலும் இரண்டு தீயணைப்பு வீரர்கள் உட்பட 10 பேர் காயங்களுக்கு உள்ளாகி உள்ளதாகவும் அதில் 04 பேரின் நிலமை மிக கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது 170 தீயணைப்பு படையினர் மேற்கொன்ட முயற்சியின் பயனாக தீ முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொன்டுவரப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெரிவித்த பொலிஸார் குறித்த வீட்டின் தரை மாடியில் ஏற்பட்ட தீ மேல் மாடிவரைக்கும் சென்றுள்ளதாகவும், இதற்கான காரணம் இன்னும் இனம் காணப்படவில்லை எனவும் தெரிவித்தனர். இதன்காரணமாக அப்பகுதி முழுவதும் கடும் பதற்றம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.