பக்கங்கள்

பக்கங்கள்

30 டிச., 2022

மார்ச் 10 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல்!

www.pungudutivuswiss.com


உள்ளூராட்சித் தேர்தல் அடுத்த வருடம் மார்ச் 10 ஆம் திகதிக்கு முன்னர் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு, தெரிவித்தது.

உள்ளூராட்சித் தேர்தல் அடுத்த வருடம் மார்ச் 10 ஆம் திகதிக்கு முன்னர் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு, தெரிவித்தது

.

    

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யும் திகதி உட்பட பல தீர்மானங்களை எட்டுவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு வியாழக்கிழமை காலை காலை 10 மணிக்கு கூடியது.

பொலிஸ் மா அதிபர், பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், தபால் மா அதிபர், அரச அச்சக அலுவலர் உள்ளிட்டோர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் ஆலோசிப்பதற்காகவே இந்த சந்திப்பு நடத்தப்பட்டதாக ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை கோரும் வர்த்தமானி அறிவித்தல் 2023 ஜனவரி 5 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என அவர் குறிப்பிட்டதுடன், தெரிவு செய்யப்பட்ட வேட்பாளர்களின் பெயர்கள் வர்த்தமானியில் வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்