பக்கங்கள்

பக்கங்கள்

11 டிச., 2022

பொதுஜன பெரமுனவும் ஐ.தே. கட்சியும் இணைந்து போட்டி-விரைவான தீர்மானத்தை எடுக்க தயாராகும் மொட்டுக்கட்சி

www.pungudutivuswiss.com

Peramuna  இணைந்து செயற்படும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் சந்திப்பொன்றை அடுத்த வாரம் நடத்த, அந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தீர்மானித்துள்ளார்.

தேர்தலை எதிர்கொள்ளும் விதம் தொடர்பில் கலந்துரையாடல்

ரணில் விக்ரமசிங்க மற்றும் பசில் ராஜபக்ச-Ranil Wickremesinghe and Basil Rajapaksa

இதன் போது எதிர்வரும் தேர்தலை எதிர்கொள்ளும் விதம் தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளது.

அத்துடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேர்தலில் தனித்து போட்டியிடுமா அல்லது ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதா என்பது குறித்து விரைவான தீர்மானத்தை எடுக்க உள்ளதாக பொதுஜன பெரமுனவின் தகவல்கள் கூறுகின்றன.

இந்த முடிவுகள் உட்பட பொதுஜன பெரமுனவின் மறுசீரமைப்பு தொடர்பில் எதிர்வரும் ஜனவரி மாதம் மாநாடு ஒன்றை நடத்தி நாட்டுக்கு அறிவிக்கவும் தீர்மனிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஐக்கிய தேசியக்கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடலாம் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.