பக்கங்கள்

பக்கங்கள்

28 டிச., 2022

இரு ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சிக்கு தாவல்

www.pungudutivuswiss.com
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் 
விரைவில் எதிர்க்கட்சியில் அமரத் தயாராகி வருவதாக அரசியல் 
வட்டாரங்களில் தெரிவிக்கின்றன.

இவர்களில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், மாவட்ட தலைவராக இருப்பதுடன் அமைச்சராகவும் சில காலம் பணியாற்றியவர்.   

அரசின் செயற்பாடுகளில் ஏமாற்றம்

இரு ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சிக்கு தாவல் | Srilanka Crisis Political Situation Rajapaksa

அரசாங்கத்தின் செயற்பாடுகளால் ஏமாற்றம் அடைந்த நிலையில் இவ் இருவரும் எதிர்க்கட்சியில் இணையத்  தீர்மானித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் பல்வேறு காரணங்களால் ஏமாற்றமடைந்த நிலையில் இதற்கு முன்னரும் எதிர்க்கட்சியில் அமர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.