பக்கங்கள்

பக்கங்கள்

26 டிச., 2022

பனிப்புயல் காரணமாக ஆயிரக் கணக்கானவர்கள் மின்சார வசதியின்றி பாதிப்பு

www.pungudutivuswiss.com
பனிப்புயல் காரணாமக கனடாவில் ஆயிரக் கணக்கானவர்கள் மின்சார வசதியின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக இவ்வாறு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

பனிப்புயல் காரணமாக ஆயிரக் கணக்கானவர்கள் மின்சார வசதியின்றி பாதிப்பு | Thousands Remain In The Dark Days After Fierce

கியூபெக்கைச் சேர்ந்த 71000 ஹைட்ரோ மின் வாடிக்கையாளர்கள் மின்சாரமின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒன்றாரியோ, கியூபெக் போன்ற மாகாணங்களில் அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கடுமையான பனி மழை பொழியும் சாத்தியங்கள் காணப்படுவதாக எதிர்வுகூறப்பட்டுள்ளது.

கனடாவில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக கிறிஸ்மஸ் பண்டிகைக் காலத்தில் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது