பக்கங்கள்

பக்கங்கள்

9 டிச., 2022

விஜய் டிவி பெயரில் மோசடி: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

www.pungudutivuswiss.com

தமிழ் சின்னத்திரையில் முக்கிய சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது விஜய் டிவி. டிஆர்பி-யில் சன் டிவிக்கு அடுத்த இடத்தில் விஜய் டிவி இருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வித்தியாசமான ரியாலிட்டி ஷோக்கள், சீரியல்களுக்கு எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

தமிழ் சின்னத்திரையில் முக்கிய சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது விஜய் டிவி. டிஆர்பி-யில் சன் டிவிக்கு அடுத்த இடத்தில் விஜய் டிவி இருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வித்தியாசமான ரியாலிட்டி ஷோக்கள், சீரியல்களுக்கு எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரிய வேண்டியது இல்லை

விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாய்ப்பு வாங்கி தருவதாக சிலர் பணம் வாங்கி மோசடி செய்து இருக்கிறார்கள் என்றும், மேலும் பலரது தனிப்பட்ட தகவல்கள், வீடியோக்கள் வேண்டும் என வாங்கி இருக்கிறார்கள்.

இப்படிப்பட்டவர்களை நம்ப வேண்டாம் என விஜய் டிவி மக்களை எச்சரித்து அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. மேலும் இழப்புகளுக்கு விஜய் டிவி பொறுப்பேற்காது என்றும் கூறி இருக்கின்றனர்.