பக்கங்கள்

பக்கங்கள்

19 டிச., 2022

சுவிஸில் காப்புறுதி முகவர்கள் வாடிக்கையாளர்களுக்கு தொலைபேசி அழைப்பு மேற்கொள்ளத் தடை

www.pungudutivuswiss.com
சுவிட்சர்லாந்தில் காப்புறுதி நிறுவன முகவர்கள் சந்தைப்படுத்தல் நோக்கில், வாடிக்கையாளர்களுக்கு தொலைபேசி அழைப்பு எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

அநேகமான சுகாதார காப்புறுதி நிறுவனங்கள் தங்களது திட்டங்களை விற்பனை செய்வதற்காக முகவர்கள் ஊடாக, வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்வது வழமையாகும்.

சில வாடிக்கையாளர்களுக்கு எப்போதாவதும், சில வாடிக்கையாளர்களுக்கு அடிக்கடியும் இவ்வாறு சந்தைப்படுத்தல் நோக்கிலான தொலைபேசி அழைப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

இவ்வாறு அழைப்பு ஏற்படுத்துவது பலருக்கு எச்சரிலூட்டுவதாக காணப்படுகின்றது.

எனவே எதிர்வரும் காலங்களில் இவ்வாறு தொலைபேசி அழைப்புக்களை மேற்கொள்வதற்கு சுவிட்சர்லாந்து நாடாளுமன்றில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான வாக்கெடுப்பில் குறித்த தொலைபேசி அழைப்புக்களை தடை செய்வதற்கு கூடுதல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.

எவ்வாறெனினும் வாடிக்கையாளர்களுக்கு நிறுவனங்கள் மேற்கொள்ளும் அழைப்புக்களுக்கு தடை விதிக்கப்படவில்லை.