பக்கங்கள்

பக்கங்கள்

26 டிச., 2022

உக்ரைனுக்கு அவசர உதவிகளை வழங்கும் சுவிஸ்

www.pungudutivuswiss.com
போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு அவசர உதவிகளை வழங்குவதாக  சுவட்சர்லாந்து அறிவித்துள்ளது.போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு அவசர உதவிகளை வழங்குவதாக  சுவட்சர்லாந்து அறிவித்துள்ளது.

மனிதாபிமான அடிப்படையில் இந்த உதவிகள் வழங்கப்படுகின்றன.

40 ஹீட்டர்கள் மற்றும் ஜெனரேட்டர்கள் உள்ளிட்ட பல பொருட்கள் இவ்வாறு அனுப்பி வைக்கப்பட உள்ளன.

குளிர்காலத்தில் உக்ரைன் மக்களுக்காக இவ்வாறு ஜெனரேட்டர்கள் வழங்கப்படுகின்றன.

சுவிட்சர்லாந்து அரசாங்கம் ஏற்கனவே உக்ரைன் மக்களுக்கு ஜெனரேட்டர்களை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உக்ரைனுக்கு வழங்கப்படும் 100 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் பெறுமதியான மனிதாபிமான உதவிகளின் ஓர் கட்டமாக இந்த உதவிகள் வழங்கப்பட உள்ளன.