பக்கங்கள்

பக்கங்கள்

16 டிச., 2022

முன்னாள் டென்னிஸ் வீரர் போரிஸ் பெக்கர் சிறையிலிருந்து விடுதலை

www.pungudutivuswiss.com 
முன்னாள் ‘நம்பர் ஒன்’ டென்னிஸ் வீரர் போரிஸ் பெக்கர் சிறையிலிருந்து விடுதலையானார். லண்டன், முன்னாள் 'நம்பர் ஒன்' டென்னிஸ் வீரர் போரிஸ் பெக்கர் (வயது 54). ஜெர்மனியை சேர்ந்த போரிஸ் பெக்கர் 3 முறை விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார். லண்டனில் வசித்து வந்த போரிஸ் பெக்கர் கடந்த 2002-ம் ஆண்டு வரி ஏய்ப்பு புகாரில் சிக்கினார். அப்போது அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, நிறுத்தி வைக்கப்பட்டது. தனியார் வங்கியில் கோடிக்கணக்கில் பணம் கடனாக வாங்கிய அவர் அதை திருப்பி செலுத்தாமல் கடந்த 2017-ம் ஆண்டு தன்னை திவாலானவராக அறிவித்தார். இதற்கிடையே, அவர் தனது வங்கி கணக்கில் இருந்து பலரது வங்கி கணக்குகளுக்கு நிறைய பணம் அனுப்பியதும், சொத்துகளை மறைத்து ஏமாற்றியதும் கண்டறியப்பட்டது. லண்டன் கோர்ட்டில் நடந்த இது தொடர்பான வழக்கில் போரிஸ் பெக்கருக்கு 2½ ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. திவால் வழக்கு என்பதால் தண்டனை காலம் குறைக்கப்பட்டதால், சில மாதங்கள் பெக்கர் சிறையில் இருக்க நேர்ந்து. இந்த நிலையில், போரிஸ் பெக்கர் நேற்று சிறையில் இருந்து விடுதலையானார். விடுதலையானதும் அவர் தனது தாய்நாடான ஜெர்மன் சென்றார்.