பக்கங்கள்

பக்கங்கள்

11 ஜன., 2023

ஒரே நேரத்தில் திடீரென தரையிறக்கப்பட்ட 760 விமானங்கள் - வெளியான காரணம்

www.pungudutivuswiss.com
கணினியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அமெரிக்காவில்
 சுமார் 760 விமானங்கள் ஒரே நேரத்தில் உடனடியாக தரையிறக்கப்பட்டுள்ளது.

மேலும், உள்ளூர், வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் 91 விமானங்கள் ரத்து 

செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க விமான போக்குவரத்து அமைப்பில் 'நோட்டம்' என்ற தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் விமான போக்குவரத்து தடைபட்டுள்ளது.


இந்த நோட்டம் தொழில்நுட்பம் விமான ஓடுதளத்தில் விமானம் இறங்குவது தொடர்பான விபரங்களை விமானிக்கும், பிற விமான ஊழியர்களுக்கும் வழங்கும் தொழில்நுட்பமாகும். 

இந்நிலையில், விமானிகளுக்கு செய்திகளை அளிக்கும் நோட்டம் அமைப்பில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு காரணமாக விமானிகளுக்கு தகவல்களை பகிர முடியவில்லையென அமெரிக்க விமான போக்குவரத்து நிர்வாக கூட்டமைப்பு விளக்கமளித்துள்ளது. 


இந்த தொழில்நுட்ப கோளாறை சரிசெய்ய தொழில்நுட்ப வல்லுநர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொழில்நுட்ப கோளாறு இன்னும் சரிசெய்யப்படாததால் பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளான நிலையில் அமெரிக்கா முழுவதும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.