பக்கங்கள்

பக்கங்கள்

21 ஜன., 2023

விரக்தியில் அரசியலில் இருந்து விலகும் மொட்டுக்கட்சியின் எம்.பிக்கள்

www.pungudutivuswiss.com
இலங்கையில் நடைபெற்ற மக்கள் போராட்டத்தின் பின்னர் விரக்தியடைந்துள்ள
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 20க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதில்லை என தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.
வெளிநாடுகளுக்கு செல்ல தயாராகும் மொட்டுக்கட்சியினர்
விரக்தியில் அரசியலில் இருந்து விலகும் மொட்டுக்கட்சியின் எம்.பிக்கள் | M P S Leaving Politics Frustration
விரக்தியடைந்துள்ள மேலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதற்காக விசா அனுமதியை பெறுவது உள்ளிட்ட வேலைகளுக்கான ஆவணங்களை தயார் செய்து வருவதாக பொதுஜன பெரமுனவின் தகவல்கள் கூறுகின்றன.
இவ்வாறான நிலைமையில், பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் மேலும் சிலர் எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபட போவதில்லை என ஏற்கனவே அறிவித்துள்ளனர்.
விரக்தியில் அரசியலில் இருந்து விலகும் மொட்டுக்கட்சியின் எம்.பிக்கள் | M P S Leaving Politics Frustration
அதேபோல் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 50க்கும் மேற்பட்டடோர் கட்சியில் இருந்து விலகி, வேறு கட்சிகளிலும் புதிய கூட்டணிகளிலும் இணைந்துக்கொண்டுள்ளனர்.
Gefällt mir
Kommentieren
Teilen