பக்கங்கள்

பக்கங்கள்

23 ஜன., 2023

சிவாஜிலிங்கம் முதல்வர் வேட்பாளர் இல்லை! - 'கட்டை' போடுகிறது ரெலோ

www.pungudutivuswiss.com

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் யாழ் மாநகரசபை முதல்வர் வேட்பாளராக எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவு செய்யப்படவில்லையென்று ரெலோவின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்தார்.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் யாழ் மாநகரசபை முதல்வர் வேட்பாளராக எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவு செய்யப்படவில்லையென்று ரெலோவின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்தார்.

கூட்டணியின் சார்பில் வேட்புமனுவை சிவாஜிலிங்கம் தாக்கல் செய்திருந்தார். அப்போது அவரே முதன்மை வேட்பாளர் என்று தமிழ் தேசியக் கட்சி கூறியிருந்தது. எனினும், முதல்வர் வேட்பாளராக எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவு செய்யப்படவில்லை என ரெலோவின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் கூறியுள்ளார்.

ரெலோவின் மூத்த உறுப்பினராக இருந்த சிவாஜிலிங்கம் முரண்பட்டுக் கொண்டு சிறிகாந்தாவுடன் வெளியேறி தமிழ்த் தேசியக் கட்சியை உருவாக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.